சென்னை: மாநகர போக்குவரத்துக் கழகத்தில் காலியாக உள்ள 532 பணியிடங்களுக்கு ஓட்டுநர்களை வழங்க விரும்பும் ஒப்பந்த நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தில் வழித்தடங்களில் பேருந்துகளை இயக்குவது தவிர்த்து, பணிமனை ஓட்டுநர்கள் என்ற பணியிடம் உள்ளது. இப்பணியில் இருப்போர் பணிமனைக்கு வரும் பேருந்தில் டீசல் நிரப்புவது. அதிகாரிகளுக்கு ஜீப் ஓட்டுவது போன்ற பணிகளை மேற்கொள்வர். உடல்நலப் பிரச்சினை காரணமாக பேருந்தை இயக்க முடியாதவர்களுக்கு, இப்பணியிடங்களில் வேலை வழங்கப்படும்.