மாத்தூர் தொட்டிப் பாலத்தில் சிறுவர் பூங்கா சீரமைப்பு

3 weeks ago 7

 

குலசேகரம், ஜன.12: குமரி மாவட்டத்தின் முக்கியமான சுற்றுலாத் தலங்களில் ஒன்று மாத்தூர் தொட்டிப் பாலம். இரண்டு மலைக்குன்றுளை இணைத்து சிற்றார் பட்டணம் கால்வாய் செல்வதற்கு வசதியாக கட்டப்பட்டுள்ளது. இது ஆசியாவிலேயே உயரமானதும் நீளமானதும் ஆகும். சிறந்த சுற்றுலாத் தலமான இதன் ஒரு பகுதி அருவிக்கரை ஊராட்சி எல்கைக்கு உட்பட்டும் மற்றொரு பகுதி வேர்கிளம்பி பேரூராட்சி எல்கைக்கு உட்பட்டதாகவும் உள்ளது. இதனால் அருவிக்கரை ஊராட்சி மற்றும் வேர்கிளம்பி பேரூராட்சி சார்பில் பயணிகளுக்கான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு உள்ளது.

வேர்கிளம்பி பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள சிறுவர் பூங்கா மற்றும் அதனைச் சார்ந்த பகுதிகள் சிதலமடைந்து காணப்பட்டது. இதனை சரிசெய்ய பேரூராட்சி சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதற்காக அம்ரூத் 2.0 திட்டத்தில் ரூ.13 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கான பணிகள் நிறைவடைந்ததையடுத்து பயணிகள் வசதிக்காக நேற்று திறந்து விடப்பட்டது. இதனை பேரூராட்சி தலைவர் சுஜிர் ஜெபசிங் குமார் திறந்து வைத்தார். இதில் துணை தலைவர் துரைராஜ் மனுவேல், செயல் அலுவலர், கண்ணன் மற்றும் கவுன்சிலர்கள் லாசர், ஓமனா, சென்றில் லதா, ஸ்டாலின் தங்க ராஜேஸ் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

The post மாத்தூர் தொட்டிப் பாலத்தில் சிறுவர் பூங்கா சீரமைப்பு appeared first on Dinakaran.

Read Entire Article