மாத்தூரில் வேளாண் முன்னேற்றக் குழு கூட்டம்

3 weeks ago 5

மணிகண்டம், அக்.26: மணிகண்டம் ஒன்றிய குழு தலைவர் கமலம் கருப்பையா முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில் மணிகண்டம் வட்டார வேளாண் உதவி இயக்குனர் பசரியாபேகம் தலைமை தாங்கி, பேசுகையில், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் பற்றியும், மண்வளம் காக்கும் முறைகள், பசுந்தாள் உர செடியின் நன்மைகள் பற்றியும் தரமான விதை தேர்வு, முளைக்கும் திறன், மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம், பாரம்பரிய நெல் சாகுபடி, ரகங்கள் தேர்வு மற்றும் விதை நேர்த்தி, ஒருங்கிணைந்த பூச்சி நோய் மேலாண்மை, இயற்கை முறையில் பூச்சிகளை கட்டுப்படுத்தும் முறைகள் மற்றும் பல்வேறு அரசின் திட்டங்கள் பற்றி விரிவாக எடுத்துக் கூறினார்.

உதவி வேளாண்மை அலுவலர் வேளாண் விற்பனை மற்றும் வணிகதுறை பற்றியும், இளநிலை பொறியாளர் வேளாண் பொறியியல் துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் பற்றியும் எடுத்துக் கூறினர். வட்டார தொழில் நுட்ப மேலாளர் செல்வி நன்றி கூறினார். ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர் ஜீவானந்தம் மற்றும் அட்மா பணியாளர்கள் செய்திருந்தனர். கூட்டத்தில், நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

The post மாத்தூரில் வேளாண் முன்னேற்றக் குழு கூட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article