மாதாந்திர பராமரிப்பு பணி: கல்லிடைக்குறிச்சியில் நாளை மின்தடை

1 week ago 3

கல்லிடைக்குறிச்சி கோட்ட செயற்பொறியாளர் சுடலையாடும் பெருமாள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

திருநெல்வேலி மின்பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட கல்லிடைக்குறிச்சி கோட்டத்தில் கரிசல்பட்டி மற்றும் சேரன்மகாதேவி துணைமின் நிலையங்களில் நாளை (26.6.2025, வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் செய்திட உத்தேசிக்கப்பட்டுள்ளதால் மேற்கண்ட துணைமின் நிலையங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பின்வரும் ஊர்கள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் மின்விநியோகம், பாதுகாப்பு கருதி நிறுத்தி வைக்கப்படும்.

அதன்படி கரிசல்பட்டி, பிள்ளைகுளம், காணியாளர் குடியிருப்பு, பட்டன்காடு, இடையான்குளம், கங்கணாங்குளம், சடையமான்குளம், வெங்கட்ரங்கபுரம், சிங்கிகுளம், தேவநல்லுர், காடுவெட்டி, மணிமுத்தான்குளம், கோவிந்தபேரி, தெய்வநாயகபேரி, மீனவன்குளம், சேரன்மகாதேவி, பத்தமடை, கோபாலசமுத்திரம், மேலச்செவல், வாணியங்குளம், சுப்பிரமணியபுரம், கரிசூழ்ந்தமங்கலம், கேசவசமுத்திரம் ஆகிய இடங்களில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

Read Entire Article