திருவொற்றியூர்: மாதவரத்தில் புதிதாக அமைக்கப்பட்ட கலைஞர் நூலகத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். மாதவரம் மண்டலம், 29வது வார்டு தணிகாசலம் சாலையில் திமுக இளைஞர் அணி சார்பில், துணை அமைப்பாளர் சீனிவாசன் ஏற்பாட்டில் கலைஞர் நூலகம் அமைக்கப்பட்டது. இதில் டி.என்.பி.சி தேர்வு, சட்டம், அரசியல், கலைஞர் பெரியார் போன்ற தலைவர்களில் வாழ்க்கை வரலாறு போன்ற பல்வேறு அம்சங்கள் கூடிய சுமார் 2000 புத்தகங்கள் மற்றும் வாசகர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளுடன் நூலகம் அமைக்கப்பட்டது. இந்த, நூலகத்தை மக்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. திமுக இளைஞர் அணி மாநில துணை செயலாளர் தூத்துக்குடி எஸ்.ஜோயல் தலைமை வகித்தார்.
மாவட்ட அமைப்பாளர் ஆர்.டி.மதன்குமார் வரவேற்றார். இதில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு, புதிய கலைஞர் நூலகத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள், பாக முகவர்கள் ஆகிய அவருக்கு நிதி உதவி மற்றும் திமுகவின் இளைஞர் அணி சமூக வலைதள பயிற்சியாளர்கள் 5 பேருக்கு டேப் வழங்கினார். நிகழ்ச்சியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சென்னை வடகிழக்கு மாவட்ட செயலாளர் மாதவரம் சுதர்சனம் எம்எல்ஏ, மாநில இளைஞர் அணி துணை செயலாளர்கள் அப்துல் மாலிக், இன்பா ரகு, மாவட்ட துணை அமைப்பாளர்கள் சீனிவாசன், சதீஷ்குமார், ஜி.கே.இனியன், கேபிள் கணேசன், டி.ஜி.ஆர்.மணிவண்ணன், வினோத், சந்தோஷ், கவுன்சிலர் கார்த்திகேயன், திருநாவுக்கரசு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
The post மாதவரத்தில் கலைஞர் நூலகம் திறப்பு appeared first on Dinakaran.