மயிலாப்பூர் நொச்சி குப்பத்தில் வீட்டின் படிக்கட்டு இடிந்து சிறுமி உள்பட மூவர் காயம்

3 hours ago 3

சென்னை: மயிலாப்பூர் எல்லையம்மன்கோயில் தெருவை சேர்ந்தவர் குப்பன் (74). இவர் தனது மனைவி ராஜாமணி மற்றும் 3 மகள்களுடன் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு தனது மனைவி மற்றும் 9 வயது பேத்தியுடன் வீட்டின் முதல் தளத்தில் அமர்ந்து பேசி கொண்டிருந்தார். அப்போது திடீரென வீட்டின் 2வது மாடிக்கு செல்லும் படிக்கட்டு இடிந்து விழுந்தது. இதில் கீழே அமர்ந்து இருந்த குப்பன் அவரது மனைவி ராஜாமணி மற்றும் 9வயது சிறுமி படுகாயமடைந்தனர்.உடனே அருகில் இருந்தவர்கள் 3 பேரையும் மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

மேலும், வீட்டின் இரண்டாவது மாடியில் சிக்கி இருந்த 4 பேரை தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து இடிபாடுகளை அகற்றி மீட்டனர். இதுகுறித்து மெரினா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நொச்சி குப்பம் பகுதியில் மெட்ரோ ரயில் சுரங்கப்பணிகள் நடந்து வருவதால், இந்த விபத்து ஏற்பட்டதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர். இருந்தாலும் விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். நல்வாய்ப்பாக உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. இந்த சம்பவத்தால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

 

The post மயிலாப்பூர் நொச்சி குப்பத்தில் வீட்டின் படிக்கட்டு இடிந்து சிறுமி உள்பட மூவர் காயம் appeared first on Dinakaran.

Read Entire Article