புதுக்கோட்டை, மார்ச்10: அனைத்திந்திய ஜனநயாக மாதர் சங்கத்தின் சார்பில் புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் உலக மகளிர்தின விழா கொண்டாடப்பட்டது. புதுக்கோட்டை மாநாகராட்சிக்கு உட்பட்ட போஸ்நகர், மாப்பிள்ளையார்குளம், கந்தர்வகோட்டை ஒன்றியம் சொக்கம்பேட்டை, கறம்பக்குடி ஒன்றியம் சங்கம்விடுதி, திருவரங்குளம் ஒன்றியம் மழவராயன்பட்டி, அறந்தாங்கி நகராட்சிக்கு உட்பட்ட செந்தமிழ்நகர், திருமயம் ஒன்றியம் லெனின்நகர், ஆவுடையார்கோவில் ஒன்றியம் ஆவுடையார்கோவில் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் கேக் வெட்டியும், இனிப்புகள் வழங்கியும், சங்கத்தின் கொடியை ஏற்றியும் உலக மகளிர்தின விழாக்கள் கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், சங்கத்தின் மாவட்ட செயலாளர் சுசிலா, தலைவர் பாண்டிச்செல்வி, பொருளாளர் வைகைராணி, விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் சலோமி, மாதர் சங்க மாவட்டக்குழு உறுப்பினர்கள் முத்துமாரி, கலைச்செல்வி, நித்யா, நாகூர் அம்மாள், ஒன்றிய நிர்வாகிகள் நிரஞ்சனாதேவி, சரண்யா, அன்புக்கரசி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
The post மாதர் சங்கம் சார்பில் உலக மகளிர் தினவிழா கொண்டாட்டம் appeared first on Dinakaran.