சென்னை : கல்லூரி படிப்பை முடித்துவிட்டு புதிதாக வேலையில் சேர்வோருக்கு அதிக சம்பளம் வழங்கும் நகரங்களின் பட்டியலில் சென்னை முதலிடத்தில் உள்ளது. சர்வதேச அளவிலான வேலைவாய்ப்பு இணையதளமான இன்டீட், ‘இன்னாகுரல் பேமேப் சர்வே’ என்ற பெயரில் ஆய்வு மேற்கொண்டது. பல்வேறு துறை சார்ந்த நிறுவனங்களின் 1,311 அதிகாரிகள் மற்றும் 2,531 ஊழியர்களிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில், சென்னையில் கல்லூரி படிப்பை முடித்து புதிதாக வேலையில் சேர்வோருக்கு (0 முதல் 2 ஆண்டு அனுபவம்) ஆரம்ப கால சம்பளம் ரூ.30,000 வரை வழங்கப்படுவது தெரியவந்துள்ளது.
மும்பை, ஐதராபாத்தில் ரூ.28,500, பெங்களூரு ரூ.28,400 என ஆரம்ப கால சம்பளமாக தரப்படுவதாக ஆய்வில் தகவல் வெளியாகி உள்ளது. மென்பொருள் மேம்பாடு முதல் பொறியாளர்கள் வரை பல்வேறு பணிகளில் சேரும் புதியவர்கள் சராசரியாக மாதம் ரூ.25 ஆயிரம் முதல் ரூ.30,500 வரை சம்பளம் பெறுகிறார்கள். 2-5 ஆண்டுகள் அனுபவம் உடையவர்கள் மாதம் ரூ.43 ஆயிரம் முதல் ரூ.48,000 வரை சம்பளம் வாங்குகிறார்கள். 5 -8 ஆண்டுகள் வரை அனுபவம் உடையவர்கள் மாதம் ரூ.64 ஆயிரம் முதல் ரூ.70 ஆயிரம் வரை சம்பளம் வாங்குகின்றனர். குறிப்பாக ஹைதராபாத்தில் 5 முதல் 8 ஆண்டு அனுபவம் உள்ளவர்கள் மாதம் ரூ.69,700 வரை சம்பளம் பெறுகின்றனர்.
The post மாதம் ரூ.30,000: புதிதாக வேலையில் சேர்பவர்களுக்கான ஆரம்ப சம்பள பட்டியலில் சென்னை முதலிடம்! appeared first on Dinakaran.