
மாத சிவராத்திரியின் மகிமையை சிவபெருமான் நந்திக்குச் சொன்னதாகவும், நந்தி மற்றவர்களுக்கு சொன்னதாகவும் புராணங்கள் சொல்கின்றன. மாத சிவராத்திரி விரதங்கள் குறித்து, மாத சிவராத்திரி விரத கல்பம் என்னும் நூலிலும் சொல்லப்பட்டுள்ளது.
1. சித்திரை மாதம் : இம்மாதம் தேய்பிறை-அஷ்டமி சிவராத்திரி. உமா தேவியால் வழிபடப்பட்டது.
2. வைகாசி மாதம் : வளர்பிறை - அஷ்டமி சிவராத்திரி. சூரிய பகவனால் வழிபடப்பட்டது.
3. ஆனி மாதம் : வளர்பிறை-சதுர்த்தசி சிவராத்திரி. ஈசனால் வழிபடப்பட்டது.
4. ஆடி மாதம் : தேய்பிறை-பஞ்சமி சிவராத்திரி. முருகனால் வழிபடப்பட்டது.
5. ஆவணி மாதம் : வளர்பிறை-அஷ்டமி சிவராத்திரி. சந்திரனால் வழிபடப்பட்டது.
6. புரட்டாசி மாதம் : வளர்பிறை-திரயோதசி சிவராத்திரி. ஆதி சேஷனால் வழிபடப்பட்டது.
7 . ஐப்பசி மாதம் : வளர்பிறை-துவாதசி சிவராத்திரி. இந்திரனால் வழிபடப்பட்டது.
8. கார்த்திகை மாதம் : 2 சிவராத்திரி. வளர்பிறை சப்தமியும் தேய்பிறை அஷ்டமியும் சிவராத்திரிகள். இவை சரஸ்வதி தேவியால் வழிபடப்பட்ட நாட்கள்.
9. மார்கழி மாதம் : வளர்பிறை, தேய்பிறையில் வரும் சிவராத்திரி. லட்சுமியால் வழிபடப்பட்டது.
10. தை மாதம் : வளர்பிறை-திருதியை சிவராத்திரி. நந்தி தேவரால் வழிபடப்பட்டது.
11.மாசி மாதம் : தேய்பிறை-சதுர்த்தசி சிவராத்திரி. தேவர்களால் வழிபடப்பட்டது.
12. பங்குனி மாதம் : வளர்பிறை-திருதியை சிவராத்திரி. குபேரனால் வழிபடப்பட்டது.
ஒவ்வொரு தமிழ் மாதத்திலும் வெவ்வேறு திதியை ஒட்டி மாத சிவராத்திரி வருகிறது. இதில் மாசி மாதத்தில் வரும் சிவராத்திரி மகா சிவராத்திரி எனப்படுகிறது. அவ்வகையில் இந்த வருடம் மகா சிவராத்திரி 26.2.2025 அன்று கொண்டாடப்படுகிறது.