மாணவி பாலியல் பலாத்காரம் குற்றவாளிக்கு விரைந்து தண்டனை பெற்று தரப்படும்: அமைச்சர் கோவி.செழியன் உறுதி

3 weeks ago 5

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் நேற்று அளித்த பேட்டி: சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த 23ம் தேதி மாணவி பலாத்காரம் செய்யப்பட்டார். இதுகுறித்து 25ம் தேதி போலீஸ் நிலையத்தில் பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் மூன்று மணி நேரத்தில் குற்றவாளி கைது செய்யப்பட்டு இருக்கிறார். அனைத்து பல்கலைக்கழக கல்லூரிகளில் பாதுகாப்பு நடவடிக்கைக்காகவும், மாணவிகள் நலன் குறித்து குழுக்கள் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளது. மாணவி உடனடியாக பாதுகாப்பு குழுவிடம் சொல்லி இருந்தால் இன்னும் துரித நடவடிக்கை எடுக்க வாய்ப்பாக இருந்திருக்கும்.

தனிப்பட்ட அச்ச உணர்வு, பெண்மைக்குரிய பாதுகாப்பு, மனநிலை இவைகளை மனதில் வைத்து2 தினங்கள் கழித்து கூறி இருந்தாலும் கூட குற்றவாளியை உடனே கைது செய்து இருக்கிறோம். குற்றவாளிக்கு விரைந்து தண்டனை பெற்று தர நடவடிக்கை எடுக்கப்படும். மாணவி பாதிக்கப்பட்டுள்ளார் என்பதை மனதில் வைத்து அரசியல் செய்ய முற்பட்ட கட்சி தலைவர்களுக்கு தரும் விளக்கம் என்னவென்றால், கடந்த காலங்களில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவங்களுக்கு எல்லாம் மாநில அரசே துணை நின்ற சம்பவம் உண்டு. பொள்ளாச்சி கூட்டு பாலியல் குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை.

நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேசிய போதெல்லாம் நிராகரித்தார்கள். ஆனால் தற்பொழுது அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் 3 மணி நேரத்தில் குற்றவாளியை கைது செய்து இருக்கிறோம். கடந்த ஆட்சியில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் கொடுக்க அச்சப்பட்டார்கள். அது ஆளுங்கட்சியின் அழுத்தம். ஆனால் தற்போது பாதிக்கப்பட்ட மாணவி புகார் 2 நாள் கழித்து அளித்தாலும், யாருடைய தங்கு தடையும் இன்றி நடவடிக்கை எடுத்திருப்பதை பாராட்ட மனமில்லாமல் இதை காரணம் காட்டி அரசை குறை சொல்லும் மனநிலை தான் உள்ளது. இவ்வாறு கூறினார்.

The post மாணவி பாலியல் பலாத்காரம் குற்றவாளிக்கு விரைந்து தண்டனை பெற்று தரப்படும்: அமைச்சர் கோவி.செழியன் உறுதி appeared first on Dinakaran.

Read Entire Article