தொண்டி, பிப்.7:தொண்டி அருகே நம்புதாளை துவக்க பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் கிழக்கு கடற்கரை சாலையை கடந்து செல்ல வேண்டியுள்ளது. அதனால் பள்ளியின் அருகே வேகத்தடை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கிழக்கு கடற்கரை சாலை நம்புதாளையில் ரோட்டின் அருகில் துவக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளிகள் உள்ளது. இரண்டு பள்ளியிலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ,மாணவியர் படித்து வருகின்றனர். காலையில் பள்ளிக்கு செல்லும் போதும் பள்ளி விட்டு திரும்பும் போதும் இந்த சாலையை கடந்து தான் செல்ல வேண்டியுள்ளது.
இச்சாலையில் டூவீலர் முதல் அனைத்து வாகனமும் மிதமிஞ்சிய வேகத்தில் செல்கிறது. இதனால் அடிக்கடி விபத்தும் நடக்கிறது. அதனால் மாணவர்களின் நலன் கருதி வேகத்தடை (பேரிகாட்) அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து ரபீக் ராஜா கூறியது, சிறு குழந்தைகள் முதல் மாணவர்கள் வரையிலும் ரோட்டை கடப்பது பெரும் சவாலாக உள்ளது.
பரபரப்பான சாலை என்பதால் டூவீலர் முதல் அனைத்து வாகனமும் அதிவேகமாக செல்கிறது. கவனிக்காமல் ரோட் டை கடக்கும் மாணவர்கள் விபத்தில் சிக்குகின்றனர். அதனால் அதிகாரிகள் இப்பகுதியில் வேக தடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
The post மாணவர்கள் பாதுகாப்பிற்கு வேகத்தடை அமைக்க மக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.