விருதுநகர், மார்ச் 1: விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் மாவட்ட அளவிலான இலக்கிய மன்றம், வினாடி வினா மன்றம், திரைப்பட மன்றம் ஆகியவற்றில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மதன்குமார் சான்றிதழ்களையும், பரிசுகளையும் வழங்கினார்.
தொடர்ந்து இலக்கிய மன்ற போட்டியில் எட்டு தலைப்புகளின் கீழ் தமிழ் வழியில் முதல் நான்கு இடங்களை பிடித்த மாணவர்களும், ஆங்கில வழியில் முதல் நான்கு இடங்களை பிடித்த மாணவர்களும், இரண்டு பொறுப்பாசிரியர்களும் சென்னையில் நடைபெற உள்ள மாநில போட்டியில் கலந்து கொள்ள செல்கின்றார்கள். அவர்களை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மதன்குமார் வழி அனுப்பி வைத்தார்.
மேலும் பொது அறிவு மற்றும் தேன் சிட்டு இதழில் இருந்து வினாடி வினா போட்டி ஆகியவற்றில் முதல் இடங்களை பெற்ற ஆவுடையாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 4 பேர் மற்றும் ராமமூர்த்தி ரோட்டில் உள்ள நகராட்சி உயர்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் நான்கு பேரும் மாநில போட்டிகளில் கலந்து கொள்ள சென்னை செல்வதற்கு முதன்மை கல்வி அலுவலரிடம் வாழ்த்து பெற்றனர்.
The post மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கல் appeared first on Dinakaran.