மாணவர்களிடம் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்க மருத்துவ கல்லூரிகள் கட்டண நிர்ணயத்தை உறுதி செய்ய வேண்டும்: ஐகோர்ட் உத்தரவு

3 days ago 3

சென்னை: தமிழகத்தில் உள்ள சுயநிதி மருத்துவ கல்லூரிகளுக்கு 2022-23, 2023-24 மற்றும் 2024-25 ஆகிய கல்வியாண்டுகளுக்கு கட்டணம் நிர்ணயித்து கட்டண நிர்ணயக் குழு உத்தரவு பிறப்பித்திருந்தது. கடந்த 2022ம் ஆண்டு அக்டோபர் மாதம் பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு சுயநிதி மருத்துவக் கல்லூரிகள் சங்கத்தின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் கே.ராஜசேகர் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எம்.சினேகா, கல்லூரிகள் சந்திக்கும் செலவுகளின் அடிப்படையில் மட்டுமே கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவு மீறப்படவில்லை என்று தெரிவித்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், மருத்துவக் கல்லூரிகளுக்கான கட்டணங்களை நிர்ணயிக்கும் போது நடைமுறையில் உள்ள விலைவாசி மற்றும் செலவுகளை கருத்தில் கொண்டு நிர்ணயிக்க வேண்டும்.

மாணவர்களிடம் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்கும் வகையிலும், கல்வி நிறுவனங்களை பாதுகாக்கும் வகையிலும் கட்டணங்கள் நிர்ணைப்பதை கட்டண நிர்ணயக் குழு உறுதி செய்ய வேண்டும். கல்லூரிகள் சமர்ப்பிக்கும் ஆவணங்களின் அடிப்படையில் கட்டணங்களை நிர்ணயித்து கட்ட நிர்ணய குழு முடிவை அறிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

The post மாணவர்களிடம் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்க மருத்துவ கல்லூரிகள் கட்டண நிர்ணயத்தை உறுதி செய்ய வேண்டும்: ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Read Entire Article