மாணவர் மோதல்களை தடுக்க கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்படும்: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

3 months ago 18

சென்னை: தமிழக உயர்கல்வித்துறையின் ஆய்வுக் கூட்டம் சென்னையில் உள்ள உயர்கல்வி மாமன்றத்தில் நேற்று நடந்தது. உயர்கல்வித்துறையின் அமைச்சர் கோவி செழியன் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் உயர்கல்வித்துறையின் முதன்மைச் செயலாளர் கோபால், உயர்கல்வி மாமன்ற தலைவர் விஜயகுமார் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். இதுகுறித்து உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் கூறியதாவது: தமிழகத்தில் 7 பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்கள் இல்லை என்பதும், பதிவாளர்கள், கண்காணிப்பாளர்கள் பணியிடங்கள் காலியாக இருப்பது என்பது குறித்த விவரங்களை பெற்றுள்ளோம். அவற்றை நிரப்பும் பணி தொடர்பாக முதல்வருடன் கலந்து பேசி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பல்கலைக் கழகங்களில் நிதிப் பிரச்னைகள் இருக்கின்றன. கல்லூரிகளில் இருக்கும் உதவிப் பேராசிரியர்கள் பணியிடங்கள் விரைவில் பூர்த்தி செய்யப்படும்.

அதற்கு கவுரவ விரிவுரையாளர்கள் நியமிக்கவும் ஏற்பாடு செய்யப்படுவதுடன், அவர்களின் பணி உறுதிப்பாட்டையும் கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களை நிரந்தரம் செய்யவும் பேசி வருகிறோம். அதன்படி 4 ஆயிரம் பேர் நிரப்பப்பட உள்ளனர். கவுரவ விரிவுரையாளர்கள் விடுபட்டுவிடாமல் நடவடிக்கை எடுக்கப்படும். ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் உதவிப் பேராசிரியர் பணிக்கான நடவடிக்கை 4 முறை ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், அதற்கான பணிகள் மீண்டும் தொடரும். கல்லூரிகளில் மாணவர்கள் இடையே மோதல் போக்கு இருக்கிறது. மாணவர்கள் கல்வி வளாகங்களில் ஒற்றுமையுடன் இருப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். மாணவர்கள் பிரச்னைகள் தொடர்ந்து கண்காணிக்கப்படும்.

The post மாணவர் மோதல்களை தடுக்க கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்படும்: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article