
மாட்ரிட்,
பல முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டம் ஒன்றில் ஜாக் டிராபர் (இங்கிலாந்து), லோரென்சோ முசெட்டி (இத்தாலி) உடன் மோதினார்.
இதில் தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டிராபர் 6-3 மற்றும் 7-6 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
இறுதிப்போட்டியில் ஜாக் டிராபர் - கேஸ்பர் ரூட் பலப்பரீட்சை நடத்த உள்ளனர்.