மாட்டுத்தாவணி காய்கறி மார்க்கெட்டில் உணவு பாதுகாப்பு சட்ட பயிற்சி வகுப்பு

3 weeks ago 5

மதுரை, டிச. 31: மதுரை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை சார்பில் நேற்று மதுரை மாட்டுத்தாவணி காய்கறி மார்க்கெட்டில் உணவு பாதுகாப்பு சட்ட பயிற்சி வகுப்பு கட்டணமின்றி நடத்தப்பட்டது. இப்பயிற்சியில் காற்கறிகளில் கெமிக்கல் கலர் சேர்ப்பு, பூச்சி மருந்துகள் பயன்பாடு, உணவு தயாரிப்பில் மறுதரம் எண்ணெய் பயன்படுத்துவது, தன் சுத்தம் மற்றும் உணவு பாதுகாப்பு சட்ட விதிகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகளுடன், பரிக்சன் நிறுவன பயிற்சியாளரும், மார்க்கெட் சங்க தலைவருமான சின்னமாயன் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட வியாபாரிகள் கலந்து கொண்டனர். பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. அதிகாரிகள் கூறுகையில், ‘‘அனைத்து வணிகர்களுக்கும் இந்த பயிற்சி வகுப்புகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

தற்போது கட்டணம் இன்றி நடத்தப்பட்ட பயிற்சி, மற்ற நேரங்களில் ரூ.300 கட்டணம் செலுத்தியே பயிற்சி பெறலாம். தற்சமயம் நடைமுறையில் உள்ள உணவு பாதுகாப்பு சட்ட நடைமுறைகள் தொடர்பாகவும் விளக்கப்பட்டது. எதிர் வரும் காலங்களில் இந்த பயிற்சி சான்றிதழ் உணவு பாதுகாப்பு சட்ட உரிமம் பெற கட்டாயம் தேவை. மதுரை மாட்டுத்தாவணி காய்கறி வியாபாரிகள் மற்றும் பலசரக்கு வணிகர்களுக்கு முதல்கட்டமாக நடத்தப்பட்டுள்ளது’’ என்றனர்.

The post மாட்டுத்தாவணி காய்கறி மார்க்கெட்டில் உணவு பாதுகாப்பு சட்ட பயிற்சி வகுப்பு appeared first on Dinakaran.

Read Entire Article