மாடியிலிருந்து கீழே விழுந்த பிரபல பாப் பாடகர் உயிரிழப்பு

3 months ago 23

அர்ஜென்டினா,

உலக அளவில் பிரபலமான பாப் பாடகர் லியாம் பெய்ன். இவருக்கென்று உலகம் முழுவதும் ரசிகர்கள் பலர் இருக்கிறார்கள். 1டி என்றும் அழைக்கப்படும் குழுவில் பாடகராக இருந்தார். இதில் லியாம் பெய்ன், ஹாரிஸ் ஸ்டைல்ஸ், ஜெய்ன், லூயிஸ், நியால் ஹாரன் ஆகிய ஐந்து பேர் இருக்கிறார்கள். இவர்கள் பாடும் பாடல்களுக்கென்று இங்கிலாந்து மட்டுமின்றி மற்ற நாடுகளிலும் ரசிகர்கள் அதிகளவில் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னர் ஒரு சில காரணங்களால் அவர் அந்த குழுவிலிருந்து விலகிவிட்டார். இந்த சூழலில் அவர் கேத் கேசிடி என்பவரை காதலித்துவந்தார். இருவரும் சேர்ந்து கடந்த மாதம் 30-ம் தேதி அர்ஜென்டினாவுக்கு சுற்றுலா சென்றனர். இந்தநிலையில், கடந்த 14-ம் தேதி அவரது தோழி அர்ஜென்டினாவில் இருந்து சென்றுள்ளார். பின்னர் வேறொரு விடுதியில் லியாம் பெய்ன் அறை எடுத்து தங்கியுள்ளார்.

இந்நிலையில் நேற்று மாலை தங்கும் விடுதியின் மூன்றாவது மாடியில் இருந்து விழுந்ததில் லியாம் பெய்ன் உயிரிழந்தார். இது தற்கொலையா அல்லது போதையில் தவறி விழுந்தாரா என்பது குறித்து விசாரணை நடந்து வருவதாகவும் தகவல் கிடைத்துள்ளது. அவருக்கு போதை பழக்கம் இருப்பதாக கடந்த ஆண்டு தெரிவித்தார். அதை தவிர்க்க பயிற்சி மேற்கொண்டது குறித்தும் அவர் சமூக வலைதளத்தில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article