‘‘புதுசா கம்பெனி தொடங்க நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவிக்கும் மாங்கனி பார்ட்டி நிர்வாகிங்களை வறுத்தெடுக்கிறாங்களாமே பார்மர்ஸ்..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா. ‘‘கிரிவலம் மாவட்டத்துல செய் ஆறு தொகுதியில இருக்குற சிப்காட்டுல, பல தனியார் கம்பெனிகள் இயங்கி வருது.. இதனால பல லட்சம் குடும்பத்தினர் வேலை செய்து பயன்பெற்று வர்றாங்க.. இப்ப இன்னும் புதுசா கம்பெனிகள் தொடங்குறதால, எக்ஸ்ட்ராவா பல லட்சம் ேபர் பயன்பெறப்போறாங்க..
ஆனா, நிலத்தை கையப்படுத்துறதுக்கு சில பார்மர்ஸ் எதிர்ப்பு தெரிவிக்குறாங்க.. இதுல மேங்கோ ப்ரூட் பார்ட்டியைச் சேர்ந்த சில நிர்வாகிகளும் ஆதரவு தெரிவிச்சு வர்றாங்களாம்.. நிலம் கையகப்படுத்துற எதிர்ப்புக்கு, ஆதரவு தெரிவிக்குற அதே மேங்கோ ப்ரூட் பார்ட்டிகள், பல தொழிற்சாலைகள்ல இருந்து ஸ்கிராப் வாங்குறதுக்கு மாஜி சட்டத்தோட மன்ற உறுப்பினரு ஒருத்தரும், காக்கிகள் தயவோடவும் பஞ்சாயத்து செஞ்சி, ஸ்கிராப் மட்டும் எடுக்குறாங்களாம்..
இவங்களுக்கு சிப்காட் வேண்டாமாம், ஆனா அதுல இருந்து வெளியாகுற ஸ்கிராப் மட்டும் வேணுமாம்.. என்னய்யா, உங்க நியாயம்னு விஷயம் தெரிஞ்ச பார்மர்ஸ் மேங்ேகா பார்ட்டிகளை திட்டி தீர்க்குறாங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘மெடல் மாவட்டத்தை தனது கண்ட்ரோலில் கொண்டுவர உதயமானவர் போடும் திட்டத்தை முடக்க பரிகார பூஜை செய்யலாமான்னு தீவிர ஆலோசனையில் இருக்கிறாராமே பழைய பால்வளம்..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘பேரவையில் துணை பதவி கிடைத்தாலும், தூங்கா நகரின் இலைக்கட்சியில் தனக்கு முன்னிலை கிடைக்கவில்லையென உதயமானவர் கருதுகிறாராம்.. காரணம், தெர்மாகோல் மாஜி நகரில் ஆதிக்கம் செலுத்துவதால், புறநகரில் தனக்கு போதிய மரியாதை கிடைப்பதில்லை என எண்ணுகிறாராம்… இதனால் தன்னை எம்எல்ஏவாக்கி அழகு பார்த்த மெடல் மாவட்டம் பக்கம் தனது கவனத்தை திருப்பியுள்ளாராம்.. ஏற்கனவே, இந்த மாவட்டத்தில் இருந்து தன்னை ஓட விட்ட, மாஜி பால்வளத்தை இம்முறை ஒருகை பார்த்து விட வேண்டும். அவரை இம்முறை ஓடவிட வேண்டுமென பக்கா ஸ்கெட்ச் போட்டுள்ளாராம்..
இதற்காக காராசேவு தொகுதியின் மாஜி எம்எல்ஏவான அரசரானவர், மாவட்டத்தின் மற்றொரு மா.செ.வை தனது கஸ்டடிக்குள் கொண்டு வந்து விட்டாராம்.. இருவரும் தற்போது பால்வளத்தை பகிரங்கமாகவே எதிர்க்கத் தொடங்கி இருக்கிறாங்களாம்… மேலும், மெடல் மாவட்டத்தில் சுழி, ஊர் என முடியும் தொகுதிகளில் மாஜி எம்எல்ஏ, மற்றொரு மா.செ. அல்லது பால்வளத்திற்கு எதிரான ஆட்களுக்கு சீட் வாங்கித் தருவதாக உதயமானவர் உறுதி அளித்துள்ளாராம்.. பலருக்கு புதிய பொறுப்புகளும் கிடைத்துள்ளதாம்.. சீட்டை காரணம் காட்டி, மாஜி பால்வளத்தின் சீட்டை கிழிக்கும் பிளான் பகிரங்கமாகவே நடந்துக்கிட்டு இருக்காம்..
இதன்மூலம் மெடல் மாவட்டத்தை தன் கண்ட்ரோலில் கொண்டு வந்து விடலாம் என்பது உதயமானவரின் திட்டம்… ஏற்கனவே கலர் கலராக கயிறு கட்டிக் கொண்டு திரியும் பால்வளமோ, எதிரிகளை முடக்க என்ன செய்யலாம். ஏதாவது பூஜை செய்யலாமானு தீவிர ஆலோசனையில் உள்ளாராம்…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘உளவுப்பிரிவு துணையுடன் சக்கை போடு போடும் ‘பார்’ உரிமையாளர் பல கோடி குவிக்கிறாராமே..’’ என்றபடி வந்தார் பீட்டர் மாமா.
‘‘கோவை தெற்கு பகுதிக்கு உட்பட்ட டாஸ்மாக் நிர்வாகத்தின்கீழ் செயல்படும் குனியமுத்தூர் பாலக்காடு மெயின் ரோட்டில் பஸ் ஸ்டாண்ட் அருகில் இடதுபுறமாக டாஸ்மாக் ‘பார்’ செயல்பட்டு வருது.. இந்த ‘பார்’ உரிமையாளர், டாஸ்மாக் நிர்வாகத்துக்கு முறையாக டெபாசிட் தொகை செலுத்துவது இல்லையாம்.. ‘பார்’ லைசென்ஸ் புதுப்பிக்கவும் இல்லையாம்.. ஆனாலும், கடந்த 7 ஆண்டுகளாக சட்ட விரோதமாக ‘பார்’ நடத்தி வர்றாராம்.. இவருக்கு, டாஸ்மாக் மற்றும் போலீஸ் அதிகாரிகள் சிலர் உடந்தையாக உள்ளனராம்..
இதை பயன்படுத்தி, குவாட்டருக்கு ரூ.10, ஆப் பாட்டிலுக்கு ரூ.30 என கூடுதல் விலை வைத்து, சட்ட விரோதமாக சரக்கு விற்று வர்றாராம்.. ‘பார்’களில் மது குடிக்க மட்டுமே அனுமதி வழங்கப்படும். ஆனால், இங்கு, சட்ட விரோதமாக இரவு, பகலாக மது விற்பனை ஜரூராக நடக்கிறதாம்.. இங்கு, பெட்டி பெட்டியாக சரக்கு வகைகள் குவிந்து கிடக்கிறதாம்.. இவருக்கு, உளவுப்பிரிவு போலீஸ்காரர் ஒருவர் உறுதுணையாக இருந்து வழிநடத்துகிறாராம்.. இதனால், அதிகாரிகளுக்கு பல லட்சம் கை மாறுவதுடன் உரிமையாளருக்கும் பல கோடி குவிகிறது..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகள் இருந்தும் சீட் மறுக்கப்படும் என்பதால் கம்பி நீட்ட தயாராகி வர்றாங்களாமே ஜக்கு எம்எல்ஏக்கள்..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா. ‘‘புதுச்சேரி சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகள் உள்ள போதிலும், இப்போதிலிருந்து கட்சி மாறுவதற்கு ஜக்கு சின்னம் இந்நாள், முன்னாள் எம்எல்ஏக்களில் சிலர் தயாராகி வருகிறார்களாம்.. அடுத்த தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்படும் என இப்போதே யூகிக்கும் சில எம்எல்ஏக்கள் கதர் கட்சி அல்லது மாற்று கட்சிக்கு கம்பி நீட்ட தயாராகி முதல்கட்ட பேச்சுவார்த்தையை முடித்துவிட்டார்களாம்.. தாமரை கட்சியில் முற்றிலும் நிலைமை வேறாகிவிட்டதாம்.. முக்கிய கூட்டங்களுக்கு கூட தற்போதைய அப்பா, மகன் எம்எல்ஏக்கள் உள்ளிட்ட 3 எம்எல்ஏக்கள் கட்சி கூட்டத்தை புறக்கணிக்க ஆரம்பித்துவிட்டனராம்..
மேலிடப்பொறுப்பாளர் அழைத்தால் கூட காய்ச்சல், வெளியில் இருக்கிறேன், பிறகு பார்க்கலாம் என காரணம் கூறி எஸ்கேப் ஆகி வருகிறார்களாம்.. ஏனென்று விசாரித்தால், கஷ்டப்பட்டு தாமரையில் ஜெயித்து என்ன பிரயோஜனம், புல்லட்சாமியிடமிருந்து ஒரு வாரியத்தை கூட உங்களால் வாங்கித்தர முடியவில்லை. எனவே எங்களை, நாங்கள்தான் காப்பாற்றிக்கொள்ள வேண்டும். அதற்கேற்ப செயல்பாடுகளை மாற்றிக்கொள்ள வேண்டியதுதானே நியாயம் என சொல்கிறார்களாம்..’’ என்று முடித்தார் விக்கியானந்தா.
The post மாங்கனி நிர்வாகிகளை வறுத்தெடுக்கும் விவசாயிகளை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.