மஹாளய அமாவாசையையொட்டி முன்னோர்களுக்கு எள், பிண்டம் வைத்து தர்ப்பணம்

5 months ago 35
மஹாளய அமாவாசையையொட்டி திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில் கடற்கரையில் குவிந்த மக்கள், கடலில் புனித நீராடி, முன்னோர்களுக்கு எள், பிண்டம் வைத்து தர்ப்பணம் கொடுத்தனர்.   இராமேஸ்வரத்தில் அதிகாலை முதலே ஏராளமானோர் அக்னி தீர்த்தக் கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்த பிறகு ராமநாதசுவாமி கோயிலில் சாமி தரிசனம் செய்தனர்.   தஞ்சை மாவட்டம், திருவையாறு காவிரி கரையில் ஏராளமானோர் புனித நீராடி, முன்னோர்க்கு திதி கொடுத்தனர்.   கோயம்புத்தூர் மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள இந்து சமுதாய நந்தவனத்தில் முன்னோர்க்கு தர்ப்பணம் கொடுத்து பலர் வழிபட்டனர். ஈரோடு மாவட்டம், பவானியில் உள்ள கூடுதுறையில் குவிந்த மக்கள் ஆற்றில் புனித நீராடி முன்னோர்க்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
Read Entire Article