மஸ்கட்டில் இருந்து சென்னை வந்த விமானம் ஓடுபாதையில் ஓடியபோது டயர் வெடித்ததால் பரபரப்பு - விபத்து தவிர்ப்பு

3 months ago 26

சென்னை: ஓமன் நாட்டு தலைநகர் மஸ்கட்டில் இருந்து 157 பேருடன் வந்த விமானம், சென்னை விமான நிலைய ஓடுபாதையில் ஓடிய போது விமானத்தின் டயர் வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. விமானியின் சாமர்த்தியத்தால் 157 பேர் உயிர் தப்பினர்.

ஓமன் நாட்டு தலைநகர் மஸ்கட்டில் இருந்து ஓமன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் 148 பயணிகள் மற்றும் 9 விமான ஊழியர்கள் என மொத்தம் 157 பேருடன் சென்னை விமான நிலைய ஓடுபாதையில் இன்று 1.45 மணியளவில் தரையிறங்கியது. ஓடு பாதையில் விமானம் ஓடிக்கொண்டிருந்த போது, விமானத்தின் பின் பக்கத்தில் இடது பக்க டயர் ஒன்று திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்தது. விமானத்தில் அதிர்வுகள் ஏற்பட்டதால், விமானத்துக்குள் இருந்த பயணிகள் பயந்து அலறினர். விமானி சாமர்த்தியமாக செயல்பட்டு, விமானத்தை பாதுகாப்பாக ஓடுபாதையில் நிறுத்தினார்.

Read Entire Article