மழையால் ஓரியூர் தரைப்பாலம் மூடல்

3 months ago 17

தொண்டி,அக்.15: தொண்டி அருகே ஓரியூரில் இருந்து திருப்புவனவாசல் செல்லும் தரைப்பாலம் மழையின் காரணமாக அடைக்கப்பட்டது. பொதுமக்கள் மாற்றுப்பாதையை பயன்படுத்த கேட்டுக் கொள்ளப்பட்டது. தொண்டி அருகே ஓரியூரில் இருந்து திருப்புவனவாசல் செல்வற்காக மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக மாற்றப்பாதை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தற்போது தொடர்ந்து மழை பெய்து வருவதால் தரைப்பாலத்தின் இருபுறமும் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளதால் ஆபத்து ஏற்படும் என்பதால், போக்குவரத்தை தடை செய்யும் விதமாக பாலத்தை அடைத்துள்ளனர்.

மாற்றுப்பாதையை பொதுமக்கள் பயன்படுத்தும்படியும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. நேற்று வருவாய் கோட்டாச்சியர் ராஜமனோகரன், திருவாடானை தாசில்தார் அமர்நாத், மண்டல துணை வட்டாச்சியர் ராமமூர்த்தி, ஆர்ஐ விஜயலெட்சுமி உட்பட வருவாய் துறையினர் பாலத்தை ஆய்வு செய்து பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டனர்.

The post மழையால் ஓரியூர் தரைப்பாலம் மூடல் appeared first on Dinakaran.

Read Entire Article