காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதியில் மழைநீர் அகற்றும் பணியில் காஞ்சிபுரம் எம்எல்ஏ, மேயர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெய்த வடகிழக்கு பருவமழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. நேற்று மழை நின்றதால் வெயில் எட்டிப்பார்க்க தொடங்கியது. இந்நிலையில் நேற்று மாலை மழைநீர் தேங்கிய பகுதிகளை காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன் மற்றும் மேயர் மகாலட்சுமி யுவராஜ் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர், கழிவுநீர் அடைப்பு நீக்கும் இயந்திரங்களை கொண்டு வந்து மாநகராட்சி ஊழியர்கள் மூலம் பணி துவக்கப்பட்டது.
தாழ்வான பகுதிகளில் தேங்கிய மழைநீரை மோட்டார் பம்ப் மூலம் அப் புறப்படுத்தினர். அந்தவகையில், கங்கைகொண்டான் மண்டபம், பூக்கடைச்சத்திரம், தாமல்வார் தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கழிவுநீர் அடைப்பு நீக்கும் ஊழியர்கள் பாதுகாப்பு உபகரணங்கள் அணிந்து பணியில் ஈடுபட்டனர். இதில், காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையர் நவேந்திரன், பொறியாளர் கணேசன் மற்றும் நிர்வாகிகள், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் யுவராஜ், பகுதி செயலாளர சந்துரு, திலகர், வெங்கடேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
The post மழைநீர் அகற்றும் பணியில் காஞ்சிபுரம் எம்எல்ஏ, மேயர் appeared first on Dinakaran.