மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் நள்ளிரவில் பள்ளிக்கரணையில் அதிகாரிகளுடன் துணை முதல் அமைச்சர் ஆய்வு

3 months ago 22
சென்னை பள்ளிக்கரணை பகுதியில் உள்ள ஏரிக்கரை, மற்றும் அம்பேத்கார் சாலையில், மழைக்கு இடையே, நள்ளிரவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து ஆழ்வார்பேட்டையில் சென்னை மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டு வரும் மழைநீர் வடிகால் கால்வாயினை உதயநிதி ஸ்டாலின் நேரில் நடந்து சென்று ஆய்வு மேற்கொண்டார். மழை வெள்ளநீர் வழிந்து செல்லக்கூடிய வழித்தடங்களில் தடை ஏற்படாமல் இருப்பதற்காக மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகளை கேட்டறிந்த அவர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு அறிவுரை வழங்கினார். கடந்த முறை மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்பு போல் இந்த வருடம் நிகழாமல் தடுப்பதற்கு பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார் 
Read Entire Article