மழை பாதிப்புகளை கண்டறிய 64 குழுக்கள் அமைப்பு: ஆட்சியர் பிரபு சங்கர் தகவல்

6 months ago 26

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் மழை பாதிப்புகளை கண்டறிய 64 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன என மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் தகவல் தெரிவித்துள்ளார். மழையால் பாதிக்கப்படும் மக்களை தங்க வைக்க 660 தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதிக பாதிப்புகள் ஏற்படக்கூடிய இடங்களில் 7 படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. கடந்த முறை பாதிப்புகள் ஏற்பட்ட ஆரணி, கொசஸ்தலை ஆறுகளில் கரைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, சோழவரம், புழல் உள்ளிட்ட ஏரிகளை 24 மணிநேரமும் கண்காணிக்க உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

The post மழை பாதிப்புகளை கண்டறிய 64 குழுக்கள் அமைப்பு: ஆட்சியர் பிரபு சங்கர் தகவல் appeared first on Dinakaran.

Read Entire Article