மழை நேரத்தில் வாகனங்களை இயக்குவது குறித்து விழிப்புணர்வு

1 month ago 6

 

திருப்பூர், அக்.17: தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வடகிழக்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது. கனமழை முதல் அதிக கன மழை வரை பெய்யக்கூடிய நிலையில் மழை நேரத்தில் வாகனங்களை இயக்குவது குறித்து திருப்பூர் மாவட்ட காவல்துறை சார்பில் சமூக வலைதளம் மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதில் முன்னாள் செல்லும் வாகனத்தில் இருந்து குறிப்பிட்ட தூரம் இடைவெளி விட்டுச் செல்ல வேண்டும். ஈரமான சாலைகளில் பிரேக் பிடிக்கும்போது கவனமாக இருக்க வேண்டும். மழை நேரத்தில் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி வாகனங்களை இயக்க வேண்டும்.

வெள்ளம் சென்று கொண்டிருக்கும் சாலையில் வாகனங்களை இயக்கும்போது விபத்து ஏற்படலாம் உள்ளிட்ட வழிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளது. இதே போல் மழை நேரத்தில் எலக்ட்ரானிக் பொருட்களை வெறும் கைகளால் தொடக்கூடாது. ெசல்ல பிராணிகளை மின்கம்பம், செல்போன் டவர்களுக்கு அருகில் கட்டிக்கூடாது‌. குழந்தைகளை மின் பொருள்களுக்கு அருகில் அனுமதிக்க கூடாது உள்ளிட்ட வழிமுறைகளை சமூக வலைதளங்கள் மூலமாக பொதுமக்களுக்கு தெரியப்படுத்தி வருகின்றனர்.

The post மழை நேரத்தில் வாகனங்களை இயக்குவது குறித்து விழிப்புணர்வு appeared first on Dinakaran.

Read Entire Article