மழை காரணமாக தண்டவாளத்தில் மண்சரிவு ஏற்பட்டதால் உதகை மலை ரயில் சேவை இன்று ரத்து

5 months ago 38

உதகை: ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் 1899ம் ஆண்டு இந்த மலை ரயில் சேவை தொடங்கப்பட்டது. கடந்த 2005ம் ஆண்டு யுனேஸ்கோ அமைப்பால் உலக பாரம்பரிய சின்னமாகவும் இது அறிவிக்கப்பட்டது. இந்த ரயிலில் பயணிக்கவும், நீலகிரியின் இயற்கையை ரசிக்கவும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம்.

மேட்டுப்பாளையம் முதல் குன்னூர் வரை நீராவி மூலமாகவும், குன்னூர் முதல் உதகை வரை டீசல் மூலமாகவும் இந்த மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் அடிக்கடி மழை பெய்து வரும் என்பதால் ரயில்பாதைகளில் ஏதேனும் இடர்பாடுகள் ஏற்பட்டால் ரயில் சேவை அவ்வப்போது நிறுத்தப்படும்

அந்த வகையில் மேட்டுப்பாளையம் உதகை இடையிலான மலை ரயில் போக்குவரத்து மண் சரிவு காரணமாக இன்று ஒரு நாள் மட்டும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மழை காரணமாக கல்லார்- அடர்லி ரயில் நிலையம் இடையே மண் சரிவு ஏற்பட்டதால் மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
தினமும் காலை 7.10 மணிக்கு மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து குன்னூர் வழியாக ஊட்டி வரை நீலகிரி மலை ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது.

The post மழை காரணமாக தண்டவாளத்தில் மண்சரிவு ஏற்பட்டதால் உதகை மலை ரயில் சேவை இன்று ரத்து appeared first on Dinakaran.

Read Entire Article