மோகனூர், ஜன.25: நாமக்கல் மாவட்டம், மோகனூர் அருகே நெய்க்காரபட்டியில் மளிகை கடை, மற்றும் டீக்கடை நடத்தி வருபவர் ராசிபாளையத்தை சேர்ந்த சரவணன் (42). இவர் நேற்று முன்தினம் வியாபாரத்தை முடித்து விட்டு கடையை பூட்டி வீட்டிற்கு சென்றார். இதனையடுத்து நேற்று காலை வழக்கம் போல் கடையை திறக்க வந்த போது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். கடையை திறந்து பார்த்த போது பணப்பெட்டியில் இருந்த ₹60 ஆயிரம் மற்றும் 1 பவுன் தங்க மோதிரம் திருடு போனது தெரிய வந்தது. இது குறித்து சரவணன், மோகனூர் போலீசில் புகார் அளித்தார். இதன் பேரில், வழக்கு பதிவு செய்த போலீசார் பணம் மற்றும் நகையை திருடிச்சென்ற மர்மநபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். நாமக்கல் மாவட்டத்தில் தற்போது குற்றச்செயல்கள் அதிகரித்து வரும் நிலையில், போலீசார் ரோந்து பணியை அதிகரிக்க வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
The post மளிகை கடையில் துணிகர திருட்டு appeared first on Dinakaran.