மல்லு இந்து ஐஏஎஸ் அதிகாரிகள் என்ற பெயரில் வாட்ஸ் ஆப் குரூப்

2 months ago 14

திருவனந்தபுரம்: கேரளாவில் கடந்த சில தினங்களுக்கு முன் தமிழகத்தை சேர்ந்த ஒரு ஐஏஎஸ் அதிகாரியின் தலைமையில் ‘மல்லு இந்து ஆபீசர்ஸ்’ என்ற பெயரில் ஒரு குரூப் தொடங்கப்பட்டது. இதில் ஜூனியர் அதிகாரிகள் முதல் மூத்த அதிகாரிகள் வரை உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டனர்.

இந்தத் தகவல் வெளியே கசியத் தொடங்கியதும் அந்த குரூப் உடனடியாக கலைக்கப்பட்டது. இது குறித்து அந்த தமிழக ஐஏஎஸ் அதிகாரியிடம் கேட்டபோது, தன்னுடைய செல்போனை யாரோ மர்ம நபர்கள் ஹேக் செய்து விட்டதாகவும், அதில் இருந்து சில ஐஏஎஸ் அதிகாரிகளின் எண்களை தேர்ந்தெடுத்து வாட்ஸ் ஆப் குரூப்பை உருவாக்கியதாகவும் கூறினார். இது தொடர்பாக திருவனந்தபுரம் போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். இந்த சம்பவம் கேரளாவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

The post மல்லு இந்து ஐஏஎஸ் அதிகாரிகள் என்ற பெயரில் வாட்ஸ் ஆப் குரூப் appeared first on Dinakaran.

Read Entire Article