மல்லசமுத்திரத்தில் பரவலாக மழை

3 months ago 20

மல்லசமுத்திரம், அக்.8: மல்லசமுத்திரம் சுற்றுவட்டார பகுதிகளில், நேற்று காலை கடும் வெயில் வாட்டி எடுத்தது. மே மாதம் போல், காலை 9 மணிக்கே வெயிலின் தாக்கம் இருந்தது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்துடன் சென்றனர். பின்னர், மாலை 4 மணியளவில், கருமேகங்கள் திரண்டு சாரல் மழை பெய்தது. தொடர்ந்து கனமழை பெய்தது. சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக மழை கொட்டியது. இதனால், மல்லசமுத்திரம், காளிப்பட்டி, அக்கரைப்பட்டி, பொரசல்பட்டி பகுதிகளில் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மழையின் காரணமாக வெயிலின் தாக்கம் தணிந்து, குளிர் காற்று வீசியது.

The post மல்லசமுத்திரத்தில் பரவலாக மழை appeared first on Dinakaran.

Read Entire Article