சென்னை: மலைவாழ்படி வழங்கியமைக்காக தாளவாடி, கடம்பூர், பர்கூர் மலைப்பகுதி அனைத்து ஆசிரியர், அரசு மற்றும் பொதுத்துறை ஊழியர் சங்கங்சங்கத்தினர் முதல்வரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.ஈரோடு மாவட்டம் ஏற்கனவே தாளவாடி, கடம்பூர் மற்றும் பர்கூர் ஆகிய இடங்கள் மலைப்பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அம்மலைப்பகுதிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு மலைவாழ்படி மற்றும் குளிர்காலப்படி வழங்கப்படாமல் இருந்தது. எனவே. தாளவாடி, கடம்பூர் மற்றும் பர்கூர் ஆகிய மலைப்பகுதிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் மலைவாழ்படி மற்றும் குளிர்காலப் படி வழங்கிட வேண்டி அரசிற்கு கோரிக்கை விடுத்தனர்.
அவர்களது கோரிக்கையை ஏற்று, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசால், தாளவாடி, கடம்பூர் மற்றும் பர்கூர் மலைப்பகுதிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு மலைவாழ்படி மற்றும் குளிர்காலப்படி வழங்கிட அண்மையில் அரசாணை வெளியிடப்பட்டது. தங்களது கோரிக்கையை நிறைவேற்றியதற்காக நன்றி தெரிவிக்கும் வகையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று (17.2.2025) தலைமைச் செயலகத்தில், அங்கீகரிக்கப்பட்ட தாளவாடி, கடம்பூர், பர்கூர் மலைப்பகுதி அனைத்து ஆசிரியர்.
அரசு மற்றும் பொதுத்துறை ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பின் மாநிலத்தலைவர் அ.சு.சரத் அருள்மாரன், பொதுச் செயலாளர் த.குருமூர்த்தி, பொருளாளர் தா.ஜோசப் பாஸ்டர், துணைப் பொதுச் செயலாளர் செ.அருண்குமார். துணைத் தலைவர் ந.ராஜா, மாநில செய்தி தொடர்பாளர் கு.தேவராஜ் ஆகியோர் சந்தித்து தாளவாடி, கடம்பூர் மற்றும் பர்கூர் ஆகிய மலைப்பகுதிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு மலைவாழ்படி மற்றும் குளிர்காலப்படி வழங்கியமைக்காக தங்களது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்.
The post மலைவாழ்படி வழங்கியமைக்காக தாளவாடி, கடம்பூர், பர்கூர் மலைப்பகுதி அனைத்து ஆசிரியர், அரசு மற்றும் பொதுத்துறை ஊழியர் சங்கங்சங்கத்தினர் முதல்வரை நேரில் சந்தித்து நன்றி..!! appeared first on Dinakaran.