மலேசியாவில் நடைபெற்ற 10th Asia Pacific Deaf Games 2024-ல் 24 பதக்கங்களை வென்ற தமிழ்நாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு துணை முதலமைச்சர் வாழ்த்து..!!

1 month ago 6

சென்னை: மலேசியாவில் நடைபெற்ற 10th Asia Pacific Deaf Games 2024-ல் 24 பதக்கங்களை வென்ற தமிழ்நாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியதாவது, மலேசியாவில் நடைபெற்ற 10th Asia Pacific Deaf Games 2024-ல் தமிழ்நாட்டைச் சேர்ந்த 12 மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர், வீராங்கனையர் வெவ்வேறு விளையாட்டுக்களில் 6 தங்கம், 13 வெள்ளி, 5 வெண்கலம் என மொத்தம் 24 பதக்கங்களைக் குவித்து சாதனை படைத்துள்ளனர். இப்போட்டியில், இந்தியா ஒட்டுமொத்தமாக 55 பதக்கங்களை வென்றுள்ள நிலையில், அதில் 24 பதக்கங்களை தமிழ்நாட்டு வீரர், வீராங்கனையர் குவித்திருப்பதில் மகிழ்ச்சியும், பெருமிதமும் அடைந்தோம்.

பதக்கங்களை வென்ற தம்பிகள் மணிகண்டன், ராக்கப்பன், வினித், சாந்தனு, கார்த்திக், முகம்மது யாசின், சுதன் மற்றும் தங்கைகள் பிரியங்கா, சுபஸ்ரீ, சமீஹா பர்வீன், ஹரினி, ஜெர்லின் அனிகா ஆகியோருக்கு வாழ்த்துகள்.இப்போட்டியில் பங்கேற்க உதவிடும் வகையில், நம் வீரர்களின் பயணம் உள்ளிட்ட செலவினங்களுக்கு தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை மூலமும், – ‘எலைட்’ திட்டத்தின் வழியாக தங்கை ஜெர்லின் அனிகாவுக்கும் நிதியுதவி அளித்திருந்தோம். தற்போது பதக்கங்களோடு திரும்பியுள்ள நம் வீரர் – வீராங்கனையரின் திறமையைப் பாராட்டுகிறோம். நம் மாற்றுத்திறனாளி வீரர்களுக்கு என்றென்றும் துணை நிற்போம், அவர்களின் வெற்றிப்பயணம் தொடரட்டும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

 

The post மலேசியாவில் நடைபெற்ற 10th Asia Pacific Deaf Games 2024-ல் 24 பதக்கங்களை வென்ற தமிழ்நாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு துணை முதலமைச்சர் வாழ்த்து..!! appeared first on Dinakaran.

Read Entire Article