மலேசியாவிலிருந்து சென்னைக்கு கஞ்சா கடத்தல் : சினிமா உதவி இயக்குநர் நண்பர்களோடு கைது

5 hours ago 2

சென்னை :போதை பொருள் விவகாரத்தில் நடிகர் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா கைது ஆன செய்தி திரைத்துரையிணையினரை அதிரவைத்தது அந்த அதிர்ச்சி இன்னும் அடக்காத நிலையில். அதே திரைத்துறையை சேர்ந்த உதவி இயக்குனர் ஒருவரை போதை பொருள் விற்பனை வழக்கில் போலீசார் கைது செய்து உள்ளார் . சென்னை 7 கிணறு பெரியன தெருவில் விலையுயர்ந்த og கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போதை பொருள் தடுப்பு முன்னறிவு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பிறகு தீவர வேட்டை நடத்திய போலீசார் தண்டையார் பேட்டையை சேர்ந்த ஸ்ரீ பிரேம்குமார், அலெக்ஸ்சந்தோஷ், ராஜன் ஆகிய 3 பேரை மடக்கி பிடித்தனர். அவர்களிடம் நடத்த பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. 32 வயது ஆன ஸ்ரீ பிரேம்குமார், அசோக் சால்வன் நடிப்பில் வெளியான கூட்டத்தில். ஒருவன் என்று திரைப்படத்தில் உதவி இயக்குனராக பணி புரிந்து உள்ளார். இவருக்கு அஸ்லம் என்பவரோடு பழக்கம் ஏற்பட்டுஉள்ளது .

அஸ்லம் மலேசியால் இருந்து உயிர்ரக கஞ்சாவை சென்னைக்கு கடத்தி வரும் ஒரு டீலர் என சொல்லப்படுகிறது . இந்த சூழலில் அஸ்லம் மலேசியால் இருந்து கொண்டுவரும் கஞ்சாவை ஸ்ரீ பிரேம்குமார் விற்பனை செய்ய தொடங்கி உள்ளார். மொத்தமாக கஞ்சாவை கொண்டு வந்து தனது விட்டில் வைத்துக் கொள்ளும் ஸ்ரீ பிரேம்குமார் அவற்றை சிறுசிறு பொட்டலமாக கட்டி தேவைப்படுவோருக்கு விற்று பணம் சம்பாதித்து இருப்பது விசாரணையில் தெரியவந்தது.

அதோடு ஸ்ரீ பிரேம்குமார் தனது நண்பரான ராஜாண்ணையும் பிசினெஸ் பார்ட்னராக சேர்த்துக் கொண்டு கஞ்சா விற்று உள்ளார் போலீசார் விசாரணையில் இது வரை அஸ்லம்மிடம் இருந்து 5முறை கஞ்சாவை வாங்கி விற்பனை செய்துஇருப்பதாகவும் மேலும் கமிஷின் தொகையை பெற கால் சென்டரில் வேலை பார்த்துவந்த அலெஸ்சந்தோஷின் வங்கி கணக்கை பயன்படுத்திவந்ததாகவும் ஸ்ரீ பிரேம்குமார் வாக்குமூலம் குடுத்துஉள்ளார். .

இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் ஸ்ரீ பிரேம்குமாரிடம் இருந்து 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான உயர்ரக கஞ்சாவையும் பைக் ஒன்றையும் பறிமுதல் செய்தனர் .மேலும் மலேசியால் இருந்து செய்ல்படும் அஸ்லம் என்பவரையும் அவரது ஆட்களையும் கைது செய்யும் வேளையில் ஈடுபட்டுஉள்ளனர். அதோடு ஸ்ரீ பிரேம்குமார் சினிமா வட்டாரத்தில் கஞ்சாவை சப்ளை செய்து இருக்கிறார் என்று கோணத்திலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஏற்கனவை நடிகர்கள் ஸ்ரீகாந்த் கிருஷ்ணா ஆகியோர் போதை பொருள் சப்ளையர்கள் மூலமாக போதை பொருளை வாங்கி பயன்படுத்திய விவகாரத்தில் கைது செய்ய பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது சினிமா துறையை சேர்ந்த உதவி இயக்குனர் கஞ்சா சப்ளை செய்த விவகாரத்தில் கைதுசெய்யப்பட்டு இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது .

The post மலேசியாவிலிருந்து சென்னைக்கு கஞ்சா கடத்தல் : சினிமா உதவி இயக்குநர் நண்பர்களோடு கைது appeared first on Dinakaran.

Read Entire Article