மலேசியா முன்னாள் பிரதமர் அப்துல்லா அகமது மரணம்

1 month ago 7

கோலாலம்பூர்,

மலேசியாவில் கடந்த 2003 முதல் 2009-ம் ஆண்டு வரை பிரதமராக இருந்தவர் அப்துல்லா அகமது படாவி. முதுமை காரணமாக கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். மேலும் இதய பாதிப்பு காரணமாக தலைநகர் கோலாலம்பூரில் உள்ள ஆஸ்பத்திரியில் கடந்த சில நாட்களாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

அங்கு சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். அவருக்கு வயது 85. நாட்டின் 5-வது தலைவராக இருந்த அப்துல்லா, தேசிய தேர்தலில் அவரது கூட்டணி அரசு சாதிக்க முடியாமல் போனதால் ராஜினாமா செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டார். பின்னர் அரசியலை விட்டு ஒதுங்கி இருந்தார்.

 

Read Entire Article