ஜூனியர் மகளிர் உலக கோப்பைக்காக நேற்று நடந்த மற்றொரு டி20 போட்டியில் மலேசியா மகளிருடன் இலங்கை அணி மோதியது. டாஸ் வென்ற மலேசியா பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய இலங்கை வீராங்கனைகள் சிறப்பாக ஆடி 6 விக்கெட் இழப்புக்கு 162 ரன் குவித்தனர். அந்த அணியின் சஞ்சனா கவிந்தி 30, தஹாமி சனேத்மா 55 ரன் குவித்தனர். பின்னர், 163 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மலேசியா மகளிர் களமிறங்கினர்.
துவக்க வீராங்கனை நுார் அலியா பிண்டி முகம்மது ஹைருன் அதிகபட்சமாக 7 ரன் எடுத்து அவுட்டானார். 2வது அதிகபட்ச ஸ்கோராக, சவுபிகா மணிவண்ணன் 6 ரன் எடுத்தார். 6 வீராங்கனைகள் ரன் எடுக்காமல் பூஜ்யத்தில் வீழ்ந்தனர். இருவர் 1 ரன்னில் கவிழ்ந்தனர். இதனால், 14.1 ஓவர்களில் மலேசியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 23 ரன் மட்டுமே எடுத்து, 139 ரன் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது. இலங்கையின் சமோதி பிரபோதா 3, மனுதி நாணயக்காரா 2, லிமான்சா திலகரத்னா 2, ராஷ்மிகா செவ்வாண்டி 1 விக்கெட் வீழ்த்தினர். இலங்கையின் தஹாமி சனேத்மா ஆட்ட நாயகி.
The post மலேசியா சோக கீதம் பூஜ்யத்தில் 6 அவுட்: இலங்கை அதிரடி வெற்றி appeared first on Dinakaran.