ஊட்டி: நீலகிரி மாவட்டம் ஊட்டி மலர்க் கண்காட்சியை தொடங்கிவைத்து, பல்வேறு நிகழ்ச்சிகள் கலந்து கொள்வதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று ஊட்டிக்கு வந்தார்.
ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் 127-வது மலர் கண்காட்சி வரும் 15-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை நடக்கிறது. இந்தக் கண்காட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இதற்காக நேற்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தடைந்தார். பின்னர், கோவையில் இருந்து மேட்டுப்பாளையம்-கோத்தகிரி சாலை வழியாக ஊட்டி வந்தார்.