மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் ஷோரூமில் கலைநயமிக்க நகைகளின் கண்காட்சி

4 months ago 15

சென்னை: தி.நகரில் உள்ள மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் ஷோரூமில், கலைநயமிக்க நகைகளின் கண்காட்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில், தி.நகர் கிளை துணை தலைவர் ரத்தீஷ், மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் மேலாண்மை பயிற்சி முஹ்சின் யாசின் மற்றும் கிளை ஊழியர்கள் ஆகியோர் உடனிருந்தனர். கலைநயமிக்க இந்த கண்காட்சி கலைகளில் ஆர்வமுள்ளவர்களின் கண்களுக்கு விருந்தாக அமையும். மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் ஷோரூமில், அணிந்தாலே ஜொலிக்கும் வைர நகைகளான ‘மைன்’ பிரம்மாண்டமான வடிவமைப்புகளை கொண்டுள்ள வெட்டாத வைரத்தால் செய்யப்பட்ட ‘எரா’ மிகவும் பொக்கிஷமாக கருதப்படும் விலை உயர்ந்தகற்களால் செய்யப்பட்ட நகை தொகுப்பான ‘பிரீசியா’ நகைகள், கைவினை கலைஞர்களால் கையால் செய்யப்பட்ட நகைகளின் தொகுப்பான ‘எத்தினிக்’ நமது கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் பாரம்பரிய இந்திய நகை வடிமைப்புகளில் உருவான ‘டிவைன்’ குழந்தைகளுக்கான நகை தொகுப்பான ‘ஸ்டார்லெட்’ ஆகியவை இந்தகண்காட்சியில் இடம்பெற்றன. மேலும், அழகிய நகைகளை சிறப்பு சலுகையில் விற்பனை செய்யப்பட்டது.

 

The post மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் ஷோரூமில் கலைநயமிக்க நகைகளின் கண்காட்சி appeared first on Dinakaran.

Read Entire Article