மறைமலைநகர் அருகே ஐயப்பன் கோயிலில் படி பூஜை

4 weeks ago 4

செங்கல்பட்டு: மளைமலைநகர் அருகேயுள்ள ஐயப்பன் கோயிலில் நடத்த, படி பூஜையில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். கார்த்திகை மாதம் என்றாலே ஐயப்ப பக்தர்கள், ஒன்றாம் தேதி மாலை அணிந்து விரதம் இருந்து கேரளா மாநிலம் சபரிமலையில் உள்ள ஐயப்பனை தரிசனம் செய்ய செல்வார்கள். அதேபோல தமிழகத்தில் உள்ள அனைத்து ஐயப்பன் கோயில்களிலும் கார்த்திகை மாதத்தில் ஐயப்பனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தினம் தோறும் பூஜைகள் நடைபெறுவது வழக்கமாக உள்ளது. அந்த வகையில், கார்த்திகை மாதம் 30ம் தேதி முடிவையொட்டி அனைத்து ஐயப்பன் கோயில்களிலும் படி பூஜை நடைபெற்றது.

அதன் ஒரு பகுதியாக செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் அருகே அமைந்துள்ள ஐயப்பன் கோயிலில் கார்த்திகை மாதம் முடிவையொட்டி கோயிலில் அமைந்துள்ள 18ம் படிகளுக்கு மலர் பூஜை நடைபெற்றது கேரளா சபரிமலையில் நடைபெறும் படி பூஜையை போலவே இங்கும் மேல் சாந்தியை வரவழைத்து கேரளா முறையில் படி பூஜை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து குத்து விளக்கு ஏற்றி மகா தீபாரதனை நடைபெற்றது. இந்த படி பூஜையில் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் மற்றும் மறைமலைநகர் அதன் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

The post மறைமலைநகர் அருகே ஐயப்பன் கோயிலில் படி பூஜை appeared first on Dinakaran.

Read Entire Article