மறைமலைநகரில் முன்னாள் எம்எல்ஏ இல்லத் திருமண விழா: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்பு

19 hours ago 4

செங்கல்பட்டு: மறைமலைநகரில் நேற்றிரவு முன்னாள் திமுக எம்எல்ஏ து.மூர்த்தி-கோமதி தம்பதியின் இளைய மகன் டாக்டர் எம்.அகிலன்-டாக்டர் சன்மதி ஆகிய இணையரின் திருமணத்தை தமிழ்நாடு துணை முதல்வரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் நடத்திவைத்து வாழ்த்தினார். காஞ்சி வடக்கு மாவட்ட திமுக துணை செயலாளரும் முன்னாள் திருப்போரூர் எம்எல்ஏவுமான து.மூர்த்தி-கோமதி தம்பதியின் இளைய மகன் டாக்டர் எம்..அகிலன் மற்றும் டாக்டர் எஸ்.சன்மதி ஆகிய இணையரின் திருமண விழா நேற்றிரவு மறைமலைநகரில் உள்ள ஆழ்வார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இத்திருமண விழாவில் தமிழ்நாடு துணை முதல்வரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, டாக்டர் எம்.அகிலன்-டாக்டர் எஸ்.சன்மதி ஆகியோரின் திருமணத்தை நடத்தி வைத்து, மணமக்களுக்கு மலர்க்கூடை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

இத்திருமண விழாவில் திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு எம்பி, காஞ்சி வடக்கு மாவட்ட செயலாளரும் அமைச்சருமான தா.மோ.அன்பரசன், காஞ்சிபுரம் எம்பி க.செல்வம், வரலட்சுமி மதுசூதனன் எம்எல்ஏ, மறைமலைநகர் நகரமன்ற தலைவரும் நகர திமுக செயலாளருமான ஜெ.சண்முகம், நகர செயலாளர் த.வினோத்குமார். நகரமன்ற துணைத் தலைவர் சித்ரா கமலக்கண்ணன், வட்டச் செயலாளர் சிவராஜ். தலைமை கழக நிர்வாகிகள், நகரமன்ற கவுன்சிலர்கள், மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post மறைமலைநகரில் முன்னாள் எம்எல்ஏ இல்லத் திருமண விழா: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்பு appeared first on Dinakaran.

Read Entire Article