திருமணமான 10 நாட்களில் சோகம் கார்கள் மோதி புதுமாப்பிள்ளை பலி

4 hours ago 3

*புதுப்பெண் உள்பட 9 பேர் படுகாயம்

திருமலை : கார்கள் மோதிக்கொண்டதில் குடும்பத்துடன் கோயிலுக்கு சென்ற புதுமாப்பிள்ளை இறந்தார். மேலும் 9 பேர் படுகாயமடைந்தனர்.

ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் ஹனுமான் ஜங்ஷன் பகுதியை சேர்ந்தவர் தீரஜ் (37), நிதிநிறுவன ஊழியர். இவருக்கும் கிழக்கு கோதாவரி மாவட்டத்தை சேர்ந்த 30 வயது பெண்ணுக்கும் கடந்த மாதம் 30ம்தேதி திருமணம் நடந்தது. கடந்த 4ம்தேதி திருமண வரவேற்பு நடந்தது.

மனைவி மற்றும் குடும்பத்துடன் விஜயவாடாவில் உள்ள கனகதுர்கையம்மன் கோயிலுக்கு செல்ல தீரஜ் முடிவு செய்தார். அதன்படி நேற்று முன்தினம் புதுமண தம்பதி மற்றும் தீரஜ்ஜின் சகோதரி அலேக்யா, அவரது குழந்தைகள் ஹம்சவிகா, தனுஷ், மற்றொரு சகோதரி லட்சுமிபிரவளிகா, அவரது கணவர் நவீன் (38), மகள் ஜான்விகா ஆகிய 8 பேருடன் காரில் புறப்பட்டனர். நேற்று முன்தினம் மாலை பாபுலப்பாடு அடுத்த வீரவல்லி பகுதியில் உள்ள தனியார் கல்லூரி வழியாக சென்றபோது எதிரே வந்த மற்றொரு கார் மோதியது.

இதில் தீரஜ் உள்ளிட்ட 8 பேரும் படுகாயமடைந்தனர். எதிரே வந்த காரில் பயணித்த கானூரை சேர்ந்த போட்டோகிராபர் சீனுவாசராவ், அவரது உதவியாளர் சீனு ஆகியோரும் காயமடைந்தனர்.இதுகுறித்து தகவலறிந்த வீரவல்லி போலீசார் சம்பவ இடம் வந்து காயமடைந்த 10 பேரையும் மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு பரிசோதித்த டாக்டர்கள், தீரஜ் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். திருமணமான 10 நாளில் புதுமாப்பிள்ளை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

The post திருமணமான 10 நாட்களில் சோகம் கார்கள் மோதி புதுமாப்பிள்ளை பலி appeared first on Dinakaran.

Read Entire Article