செங்கல்பட்டு, பிப்.13: செங்கல்பட்டு மாவட்டம், மறைமலை நகர் நகராட்சி 15வது வார்டுக்கு உட்பட்ட திருவள்ளுவர் சாலையிலுள்ள வள்ளலார் சிலைக்கு கடந்த இரண்டாம் ஆண்டு தைப்பூச விழா மற்றும் மறைமலைநகர் சுத்தசன்மார்க்க சபையின் மூன்றாம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு ஜோதி வழிபாடு நடைபெற்றது. இதில், அருட்பெரும்ஜோதி அகவலை படித்து வள்ளலார் இராமலிங்க அடிகளாரின் அகவல்பாடியவாறு ஜோதி வழிபாடு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன் பங்ககேற்று வள்ளலாரை வழிபட்டார்.
அதனை தொடர்ந்து, காலை சிற்றுண்டி மற்றும் மதியம் வடை பாயாசத்தோடு அறுசுவை உணவு, இரவு சிற்றுண்டி என இரண்டாயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.அதேபோல இங்கு தினசரி சமரச சுத்த சன்மார்க்க சபை சார்பில் வள்ளலார் புகழ் அருட்பெருஞ்ஜோதிஅகவல் படித்து அன்னதானம் வழங்கப்பட்டு வருகின்றனர். செங்கல்பட்டு மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் தொழிலதிபர் மதுசூதனன் மற்றும் செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன் ஆகியோரின் சொந்த செலவில் ₹85 ஆயிரம் மதிப்பீட்டில் வள்ளலார் திருவுருவச்சிலை நிறுவப்பட்டது குறிப்பிடத்தக்கது. இவ்விழாவில் மறைமலைநகர் நகராட்சி 15வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் விஜயலட்சுமி நித்தியானந்தம், மறைமலை நகர் சுத்த சன்மார்க்க சபைச் சார்ந்த மகேந்திரன்,வீரா, சிவஞானபாண்டியன் மற்றும் நிர்வாகிகள் எராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு வள்ளலாரை வணங்கி வழிப்பட்டனர்.
The post மறைமலைநகரில் தைப்பூசத்தையொட்டி வள்ளலார் ஜோதி வழிபாடு: எம்எல்ஏ பங்கேற்பு appeared first on Dinakaran.