செங்கல்பட்டு, பிப்.15: மறைமலை நகரில் உள்ள பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகரில் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற ‘போதையில்லா உலகம் படைப்போம் மனித உயிர்களை காப்போம்’ என்ற தலைப்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில், 600க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். போதை பழக்கத்தால் ஏற்படும் விபரீதம் அதனால் ஏற்படும் இழப்பு குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு வாசகங்களை கையில் ஏந்தியவாறு சாலைவிதிகளை கடைபிடிக்க வேண்டும், தலைக்கவசம் மற்றும் சீட்பெல்ட் அணியவேண்டும்.மது அருந்திவிட்டுசெல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டக்கூடாது என்பது குறித்து ஒழிப்பு விழிப்புணர்வு கோஷங்கள் எழுப்பியவாறு மறைமலைநகர் நகராட்சியில் துவங்கிய முக்கிய வீதிகள் வழியாக சுமார் 3 கிலோமீட்டர் வரை விழிப்புணர்வு பேரணி சென்றது. இந்த விழிப்புணர்வு பேரணியை மறைமலைநகர் நகர மன்ற தலைவர் ஜே.சண்முகம் மற்றும் நகர மன்ற துணைத் தலைவர் சித்ரா கமலக்கண்ணன், தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் ஆய்வாளர் சிவகுமார் ஆகியோர் பேரணியை துவக்கி வைத்தனர்.பேரணியில் பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் மாணவ-மாணவிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
The post மறைமலை நகரில் மாணவர்கள் பங்கேற்ற போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி appeared first on Dinakaran.