மறைந்த கேப்டன் விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு நாள்; தடையை மீறி பேரணி!

3 weeks ago 5

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு நாளையொட்டி சென்னை கோயம்பேட்டில் தே.மு.தி.க. பேரணி தொடங்கியது. பிரேமலதா தலைமையில் தே.மு.தி.க.வினர் அமைதி பேரணியை நடத்தி வருகின்றனர். போலீஸ் அனுமதி மறுத்த நிலையில் தடையை மீறி பேரணி நடைபெற்று வருகிறது. தே.மு.தி.க தலைவர் விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அமைதி பேரணி நடைபெறும் என பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் முன்னதாக அறிவித்து இருந்தார்.

அதன்படி சென்னை கோயம்பேடு தேர்தல் ஆணைய அலுவலகத்தில் இருந்து நினைவிடம் வரை பேரணியாக செல்ல தே.மு.தி.க திட்டமிட்டிருந்தனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து விஜயகாந்த் நினைவிடத்தில் தேமுதிக தொண்டகர்கள் குவிந்த நிலையில், சென்னை கோயம்பேடு பகுதியில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தே.மு.தி.கவின் அமைதி பேரணிக்கு காவல்துறை அனுமதி மறுத்தது.

இந்நிலையில், காவல்துறையினரின் தடையை மீறி தேமுதிகவினர் அமைதி பேரணியை நடத்தி வருகின்றனர். அமைதி பேரணிக்கு அனுமதி கோரி மேற்கு மண்டல காவல் இணை ஆணையர் விஜயகுமாருடன் தேமுதிக துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் பேச்சுவார்த்தை நடத்தினார். இருப்பினும் அமைதி பேரணிக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தடையையும் மீறி தேமுதிகவினர் அமைதி பேரணியில் ஈடுபட்டுள்ளனர்.

 

The post மறைந்த கேப்டன் விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு நாள்; தடையை மீறி பேரணி! appeared first on Dinakaran.

Read Entire Article