மர்ம விலங்கு கடித்து 9 ஆடுகள் பலி தண்டராம்பட்டு அருகே பரபரப்பு

1 day ago 2

 

தண்டராம்பட்டு, மே 10: தண்டராம்பட்டு அடுத்த மேல் சிறுபாக்கம் ஊராட்சியை சேர்ந்த செல்ல பாண்டியன் விவசாயி. இவருக்கு சொந்தமான 16 ஆடுகள் தனது நிலத்தில் நேற்று முன்தினம் மாலை அடைத்து வைத்துவிட்டு வீட்டுக்கு சென்றுவிட்டார். இந்நிலையில் நேற்று காலை ஆடுகளை சென்று பார்த்தபோது மர்ம விலங்கு கடித்து ஒன்பது ஆடுகள் பலியாகி இருந்ததும், ஏழு ஆடுகள் காயங்களுடன் வெளியே இருந்தது தெரியவந்தது.
இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த விவசாயி, உடனடியாக இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் சிவலிங்கத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் மருத்துவர், சாத்தனூர் அணை வன அலுவலர் ரவி ஆகியோர் ஆடுகள் பலி இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். பின்னர் உயிரிழந்த ஆடுகளை உடற்கூறு ஆய்விற்காக ஆட்டிலிருந்து சில உறுப்புக்கள் எடுத்துச் சென்றனர்.கேப்சன்……மர்ம விலங்கு கடித்து உயிரிழந்த ஆடுகள்.

The post மர்ம விலங்கு கடித்து 9 ஆடுகள் பலி தண்டராம்பட்டு அருகே பரபரப்பு appeared first on Dinakaran.

Read Entire Article