மருமகனை வெட்டி கொன்ற மாமனாருக்கு வலைவீச்சு

1 week ago 4

மும்பை,

மராட்டிய மாநிலம் பால்கர் மாவட்டம் மனோர் அருகே உள்ள வாடா பகுதியை சேர்ந்த 42 வயது நபர் ஒருவர், தனது மாமாவிடம் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வேலை வாங்கி தருவதாக கூறி பணம் வாங்கி இருந்தார். ஆனால் அவர் வேலை வாங்கி தராமல் இழுத்தடித்து வந்தார். இதனால் மருமகனுக்கும் மாமனாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு வந்தது.

இந்தநிலையில் தான் வேலைக்காக கொடுத்த பணத்தை திரும்பி தருமாறு மருமகனிடம் அவர் கேட்டுள்ளார். அப்போது மருமகன் பணத்தை திருப்பி தர மறுத்து உள்ளார். இந்தநிலையில் கடந்த 7-ந்தேதி இரவு மருமகன் வீட்டிற்கு சென்ற மாமனார் அங்கு ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த மருமகனை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச்சென்றார்.

இந்த சம்பவத்தில் மருமகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது பற்றி தகவல் அறிந்த போலீசார் அங்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து, தப்பிஓடிய மாமனாரை வலைவீசி தேடிவருகின்றனர்.

Read Entire Article