மருத்துவர் சுப்பையா கொலை வழக்கு ஆவணங்களை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு

1 week ago 2

சென்னை: மருத்துவர் சுப்பையா கொலை விவகாரத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை முன்னதாக விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த வழக்கில் குற்றவாளிகள் அனைவருக்கும் பிடிவாரண்ட் பிறப்பித்து கடந்த நவம்பர் 18ம் தேதி உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் மேற்கண்ட வழக்கானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி பி.எம்.திரிவேதி தலைமையிலான அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இதில் முன்னதாக பிறப்பிக்கப்பட்ட உத்தரவின்படி குற்றவாளிகள் மற்றும் அவர்களது தரப்பு வழக்கறிஞர்கள் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் நேற்று நேரில் ஆஜராகி இருந்தனர்.

இதைத்தொடர்ந்து அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, இந்த கொடூர கொலை வழக்கில் தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டு குற்றவாளிகள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டது அதிர்ச்சியான ஒன்றாகும். இந்த வழக்கில் ஏற்கனவே குற்றவாளிகள் மற்றும் அவர்களது தரப்பு வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளனர்.எனவே இந்த வழக்கின் விசாரணையை வேறு ஒரு தேதியில் இறுதி விசாரணைக்காக பட்டியலிட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

இதையடுத்து தமிழ்நாடு அரசு தரப்பின் வாதங்களை கேட்டுக்கொண்ட நீதிபதிகள், மருத்துவர் சுப்பையா தொடர்பான வழக்கின் விசாரணையை ஆறு வாரத்திற்கு ஒத்திவைக்கிறோம். மேலும், இந்த இடைப்பட்ட காலத்தில் எதிர்மனுதாரர்கள் (குற்றவாளிகள்) பொன்னுசாமி, பேசில் பென்னுசாமி, போரிஸ் பொன்னுசாமி உள்ளிட்ட ஒன்பது பேரும் பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும். அதேபோன்று உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஆவணங்கள் அனைத்தையும் தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

The post மருத்துவர் சுப்பையா கொலை வழக்கு ஆவணங்களை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Read Entire Article