
சென்னை ,
சவுக்கு சங்கர் கடந்த 12ம் தேதி மாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் . திடீர் நெஞ்சுவலி காரணமாக சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார் .அங்கு அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது .
இந்த நிலையில், நெஞ்சுவலி காரணமாக சிகிச்சை பெற்றுவந்த சவுக்கு சங்கர் மருத்துவமனையில் இருந்து இன்று வீடு திரும்பினார் . இதனை தனது எக்ஸ் தள பக்கத்தில் அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சவுக்கு சங்கர் கூறியிருப்பதாவது .
இருதய பிரச்சனைகளுக்கான சிகிச்சைக்குப் பிறகு, நான் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு இப்போது நலமாக இருக்கிறேன். எனது மருத்துவர்கள், நண்பர்கள் மற்றும் நலம் விரும்பிகளுக்கு நன்றி. என தெரிவித்துள்ளார்