
சென்னை,
சினிமா மற்றும் கார் பந்தயத்தில் சிறந்து விளங்கும் அஜித் குமாரின் செயலை பாராட்டும் விதமாக ஜனாதிபதி திரவுபதி முர்மு அவருக்கு பத்மபூஷன் விருது வழங்கி கவுரவித்தார். அந்த விருது வழங்கும் விழாவில் அஜித் குமார் குடும்பத்தினரும் கலந்து கொண்டார்.
இதையடுத்து நேற்று டெல்லியில் இருந்து குடும்பத்தினருடன் நடிகர் அஜித் சென்னை திரும்பினார். இந்த சூழலில், சென்னை கிரீம்ஸ் சாலை அப்போலோ மருத்துவமனையில் நடிகர் அஜித் குமார் இன்று மதியம் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு பரிசோதனை நடைபெற்றது.
இந்நிலையில், நடிகர் அஜித்குமார் சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். நேற்று விமான நிலையத்தில் குவிந்த ரசிகர்களால் ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.