மருத்துவமனை மேற்கூரை இடிந்து விபத்து; 3 பேர் பலி

4 hours ago 1

ராஞ்சி,

ஜார்க்கண்ட் மாநிலம் கிழக்கு சிங்பம் மாவட்டம் ஜம்ஷத்பூரில் அரசு மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையின் 3வது தளத்தில் மருந்தக வார்டின் மேற்கூரை நேற்று இடிந்து விழுந்தது.

இந்த சம்பவத்தில் நோயாளிகள் பலர் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர். தகவலறிந்து விரைந்து வந்த மீட்புக்குழுவினர் இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், இந்த விபத்தில் நோயாளிகள் 3 பேர் உயிரிழந்தனர். மேலும், சிலர் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்த அனைவரும் மீட்கப்பட்டு அதே மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read Entire Article