
போபால்,
மத்தியபிரதேச மாநிலம் தலைநகர் போபாலில் தனியார் மருத்துவக்கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் 3ம் ஆண்டு மருத்துவம் படித்து வந்த மாணவனை சீனியர் மாணவர்கள் 3 பேர் திங்கட்கிழமை சரமாரியாக தாக்கினர்.
கல்லூரி வளாகத்தில் இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது. ஜுனியர் மாணவனை பரஸ்ஜெயின் உள்பட 3 சீனியர் மாணவர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். பிரஸ்ஜெயினின் குடும்பத்தினருக்கு தகாத மெசேஜ்களை அனுப்பியதால் ஜுனியர் மாணவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான வீடியோ வைரலான நிலையில், பரஸ்ஜெயின் உள்பட 3 பேர் மீது ஜுனியர் மாணவன் புகார் அளித்துள்ளான். அதேவேளை, ஜுனியர் மாணவன் மீது பரஸ்ஜெயினும் புகார் அளித்துள்ளார். இரு புகார்கள் தொடர்பாகவும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.