மருத்துவ மையத்தில் எஸ்.எஸ்.பாலாஜி எம்எல்ஏ சிகிச்சைக்காக அனுமதி

3 hours ago 2

சென்னை: திருப்போரூர் தொகுதி விசிக எம்எல்ஏ எஸ்.எஸ்.பாலாஜிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதை தொடர்ந்து அவர் மருத்துவ மையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக எஸ்.எஸ்.பாலாஜி எம்எல்ஏ வெளியிட்ட அறிக்கை: எனது அன்றாட அலுவல்கள் காரணமாக உணவு பழக்க வழக்கத்தில் மாறுதல்கள் ஏற்பட்டு அதன் தாக்கம் எனது உடல்நிலையில் ஏற்பட்டுள்ளது.

இதனை தொடர விடுவது எனது உடல்நலனுக்கு நல்லதல்ல என மருத்துவர்கள் தொடர்ந்து வலியுறுத்தினர். அதோடு அவர்கள் இதுதொடர்பாக உரிய நல மையம் ஒன்றில் குறைந்தது 15 நாட்கள் இருந்து உடலை சீர்படுத்த ஆலோசனை வழங்கியுள்ளனர். இதே அறிவுறுத்தலை விசிக தலைவர் திருமாவளவனும் செய்திட்டார். இவற்றை ஏற்றுக் கொண்டு 20ம் தேதி (நேற்று) முதல் வரும் 3ம் தேதி வரை இந்த உடல் சீரமைப்பு சிகிச்சை மேற்கொள்ள செல்கிறேன்.

எனது தொகுதி மக்கள் இந்த காலத்தில் என்னை அலுவல் நிமித்தமாக தொடர்பு கொள்ள 94430 74387 என்கிற எண்ணில் என்னுடைய அதிகாரப்பூர்வ உதவியாளர் ஓய்வு பெற்ற துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஏகாம்பரத்திடம் தகவல்களை தெரிவிக்கவும். அவரிடம் தகவலை பெற்றுக்கொண்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள உறுதியளிக்கிறேன். இந்த தவிர்க்க முடியாத சூழலுக்கு எனது வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post மருத்துவ மையத்தில் எஸ்.எஸ்.பாலாஜி எம்எல்ஏ சிகிச்சைக்காக அனுமதி appeared first on Dinakaran.

Read Entire Article